பட்டிமன்றம்
விளக்கம்:
* ஆன்றோரும் சான்றோரும் நிறைந்த அவையில் அழகுத்தமிழில் ஆழ்ந்த இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த தலைப்புகளில், இரு பிரிவினரிடையே நடக்கும் இதமான சொற்போரே பட்டிமன்றம்.
* தலைப்பு சார்ந்து வாதிடுதலே பட்டிமன்றத்தின் தலையாய நோக்கம்.
* தலைப்பைச் சார்ந்தும் ஆதரித்தும் தலைப்பின் மையக்கருத்தை மறுதலித்தும் எவ்வித தளர்வுமின்றி தன் தலைப்பு சார்ந்து வாதிடுதலே சிறந்த பட்டிமன்றம்.
* நலம் பயக்கும் நகைச்சுவையும் நளினமான ஏளனமும் கலந்து வாதிடும் சொல்லாடலாகிய பட்டிமன்றம் இருகரம் கூப்பி இனிதே வரவேற்கப்படுகிறது.
தலைப்பு:
தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது கல்வித் துறையே! கலைத் துறையே! தொழிற் துறையே! ஊடகத் துறையே!
விதிகள்:
* ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒரு குழு மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
* ஒரு குழுவிற்கு நான்கு நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்கள் மட்டுமே வாதிட அனுமதி வழங்கப்படும்.
* பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.