- தமிழ்
நிகழ்ச்சியின் பெயர் :பட்டிமன்றம்
விளக்கம்:
* ஆன்றோரும் சான்றோரும் நிறைந்த அவையில் அழகுத்தமிழில் ஆழ்ந்த இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த தலைப்புகளில், இரு பிரிவினரிடையே நடக்கும் இதமான சொற்போரே பட்டிமன்றம்.
* தலைப்பு சார்ந்து வாதிடுதலே பட்டிமன்றத்தின் தலையாய நோக்கம்.
* தலைப்பைச் சார்ந்தும் ஆதரித்தும் தலைப்பின் மையக்கருத்தை மறுதலித்தும் எவ்வித தளர்வுமின்றி தன் தலைப்பு சார்ந்து வாதிடுதலே சிறந்த பட்டிமன்றம்.
* நலம் பயக்கும் நகைச்சுவையும் நளினமான ஏளனமும் கலந்து வாதிடும் சொல்லாடலாகிய பட்டிமன்றம் இருகரம் கூப்பி இனிதே வரவேற்கப்படுகிறது.
தலைப்பு:
நாளைய இந்தியாவின் தேவை இளைஞர்களா! தொழில் நுட்பமா! தலைமையா! கலாச்சாரமா!
விதிகள்:
* ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒரு குழு மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
* ஒரு குழுவிற்கு நான்கு நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு நபருக்கும் மூன்று நிமிடங்கள் மட்டுமே வாதிட அனுமதி வழங்கப்படும்.
* பங்கேற்பாளர்கள் தங்களுக்கு உரிய நேரத்திற்குள் வாதத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியின் பெயர் : கவிதை உலகம்
இளைய பாரதிகளே! இசை தமிழில் கவி படைத்து, செவி நிறைய தான் படித்து, ஓங்கு புகழ் தமிழ் வளர்க்க வருக! வருக! தீந்தமிழில் தான் கவிதை தருக.. தருக..
தலைப்பு:
போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்கும் நேரத்தில் அறிவிக்கப்படும்.
விதிகள்:
* கவிதை துளிப்பா (ஹைக்கூ), புதுக்கவிதை, மரபுக்கவிதை என எதுவாகவும் இருக்கலாம்.
* கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
* கல்லூரிக்கு 5 மாணவர்கள் வீதம் போட்டியில் பங்குபெறலாம்.
* கவிதை எழுத கால அளவு 60 மணித்துளிகள் வழங்கப்படும்.
* போட்டியின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் எழுதிய கவிதையை படித்து காட்ட வேண்டும்.